25 Dec 2014

அபிவிருத்திப் பணிகளுக்கு பங்களிப்பு வழங்கும் பொது மக்கள் ஊழியர் படை

SHARE
நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை பூரணப்படுத்துவதற்காக இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பொது மக்கள் ஊழியர் படை தமது அளப்பரிய ஆதரவை வழங்கி வருகின்றது.
2009ம் ஆண்டு பயங்கரவாதம் நிறைவு பெற்றதன் பின்னர் நாடு அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் நாட்டின் அபிவிருத்தி பணிகள் நிமித்தம் வேலையில்லாத நபர்களை இராணுவத்தில் இணைத்துள்ளதுடன் அவர்கள் நாட்டின் அபிவிருத்தி திட்டங்‍களில் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

  சுமார் 8500 தொடக்கம் 10000 வரையிலான இராணுவ வீரர்கள் இப்பணிகளில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கை திறைசேரியின் வருடாந்த ஒதுக்கீடுகளுக்கு அமைய இவர்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்ட பொதுமக்கள் ஊழியர் படையினருக்கு உயர்ந்த ஊதியம் வழங்கப்படுவதன் அவர்களுக்கான மருத்துவம் உட்பட ஏனைய அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

urban developmentநகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் திட்டங்களான அகுரேகொட இராணுவ தலைமையகம், டொரிங்டன் சதுக்கம், கொழும்பு மிதக்கும் சந்தை தொகுதி மற்றும் நகர அபிவிருத்தி திட்டங்களில் இவர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

தச்சு வேலை, கணக்கெடுப்பு, எழுத்தாளர், உணவு தயாரிப்பு மற்றும் சமையல், பொதுக் கடமைகள், கடை நிர்வாகம், கணினி இயக்குனர், மோட்டார் இயக்குனர், இசை மற்றும் முன் பள்ளி ஆசிரியர்  உட்பட எழுபது துறைகளுக்கு இவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மருத்துவ பரிசோதனை உற்பட ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன் இராணுவத்தின் தொண்டர் படையணியில் சேவையாற்றுவதற்கு அவர்கள் தகுதி பெறுகின்றனர்.  அந்த சேவைக்கான வழமையான கொடுப்பனவையும் பெற்றுக் கொள்வர். அத்துடன் தேவைக்கேற்ப சீருடைகளையும் வேலைக்கு உகந்த ஆடைகளையும் அணிய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தொழில் சார்ந்த வேலைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் இராணுவ சம்பந்தமான வேலைகளில் இருந்து முற்றாக விலக்களிக்கப்பட்டுள்ளனர், அதுமற்றுமன்றி இவர்கள் மருத்துவ வசதி உள்ளடங்கலாக குறித்த சேவைக்குரிய நலன்புரி, மற்றும் அனைத்து சேவைகளையும் பெற தகுதிபெறுவர்.

தேசத்தை கட்டியெழுப்பும் முகமான அபிவிருத்தி திட்டங்களுக்காக இவர்களின் மறைமுகப் பங்களிப்பு வெகுவாக பாராட்டத்தக்கதாகும், போர் வீரர்கள் நாட்டை ஒன்றிணைப்பதற்காக போராடினார்கள், இலங்கை பொது மக்கள் ஊழியர் படையினர் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக பல துறைகளில் போராடுகின்றனர் என்றால் மிகையாகாது.

ஐக்கிய அமேரிக்காவிலும் இது போன்ற ஒரு பொது மக்கள் ஊழியர் படையானது பொது மக்கள் கண்காணிப்பு படை என்ற பெயரில் 1933-1942 ஜனாதிபதி ப்ரேங்ளின் ரூஸ்வல்டின் எண்ணக்கருவுக்கமைய உருவாக்கப்பட்டது.

FAஇதில் வேலையில்லாத மற்றும் திருமணமாகாதவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்,   ஆட்சேர்ப்பின்போது ஒரு தடவைக்கு ஆகக்கூடியது 300000 பேர் வரை உள்வாங்கப்பட்டனர். இதற்கமைய 9 வருடங்களில் 2.5 மில்லியன் இளைஞர்கள் இதில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் 3 பில்லியன் மரங்களை அமெரிக்காவின் மீள் பசுமை திட்டத்திற்காக நடுகை செய்ததுடன் 800 க்கும் மேற்பட்ட தேசிய பூங்காக்களையும் உருவாக்கியுள்ளனர். மற்றும் பின்தங்கிய பிரதேசங்களில் பாதைகள் மற்றும் இராணுவ கட்டடங்களையும் நிர்மானித்துள்ளனர்.(nl)
SHARE

Author: verified_user

0 Comments: