25 Dec 2014

மட்டக்களப்பில் மைத்திரியின் அலுவலகம் மீது தாக்குதல்

SHARE
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளியில் அமைக்கப்பட்டிருந்த எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அலுவலகம் எரியூட்டப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

20ற்கும் மேற்பட்டோரைக் கொண்ட ஆயுதம் தாங்கிய கும்பல் இந்த அலுவலகத்துக்கு இன்று (25) அதிகாலை வந்துள்ளனர்.

இவர்கள் பெற்றோல் குண்டுகளை அலுவலகத்தின் மீது வீசியதுடன், அங்கிருந்த பொருட்களையும் அடித்து உடைத்ததாக அந்த அலுவலகத்தில் இருந்தவர்கள் கூறினர்.

இந்தச் சம்பவத்தின் போது, அலுவலகத்தில் இருந்த 11 பேரும் தப்பியோடியதாக குறிப்பிட்டுள்ளனர்

இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (ad)

.

SHARE

Author: verified_user

0 Comments: