கடந்த சில தினங்களாக இலங்கை பூராக பெய்து வரும் கடும் மழையினால் பல கிராமங்கள் பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. போரதீவுப் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இராமக்கிருஷ்ண கலாச்சார மண்டபம் முற்ராக நீரில் மூழ்கியுள்ளது.
இந்த மண்டபத்திற்கு அருகில் கூனங்குளம் அமைந்துள்ளதால் அக்குளத்தில் நீர் மட்டம் அதிகரித்தமையால் அருகில் இருந்த கலாச்சாரமண்டபம் நீரில் மூழ்கியுள்ளது. மண்டபத்தினுள் நீர் உட்புகுந்துள்ளதனால் கற்றல் நடவடிக்கைக்கான அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கற்றல் உபகரணங்கள் நீரினால் அடித்துச் செல்லப்பட்டதுடன் பிராத்தனை உபகரணங்கள் மற்றும் அங்கிருந்த பல பொருட்களும் நீரில் மூழ்கியுள்ளது.
இது சம்;மந்தமாக மன்றத் தலைவர் சம்மந்தப்பட்;ட அதிகாரிகளுக்கு அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். வெள்ள நீரினால் பாதிப்படைந்த ஸ்ரீ இராமக்கிருஷ்ண மண்டபத்திற்கு உதவிகளை செய்ய விரும்புபவர்கள் உரியவர்களோடு தொடர்பு கொண்டு தங்கள் பங்கழிப்புக்களை செய்யலாம்.
தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இல-077-7200771
0 Comments:
Post a Comment