29 Dec 2014

மக்கள் சமுத்திரம், அதிர்ந்து போனார் மைத்திரி

SHARE
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து, கல்முனை பிரபல வர்த்தகர் ஏ.எம்.பைரூஸின் ஏற்பாட்டில் கல்முனை கடற்கரைப்பள்ளி வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை நடைபெற்ற கூட்டத்தில் வரலாறு காணாத மக்கள் பெரு வெள்ளமாய் அணிதிரண்டிருந்தனர். சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு குழுமியிருந்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிக்கான ஆதரவை இன்று தெரிவித்த நிலையில் அதன் தலைவைர் ரவூப் ஹக்கீமின் அழைப்பினை ஏற்று இப்பிரச்சார கூட்டத்திற்கு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார். 
இப்பிரச்சார கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்திரணி எச்.எம்.எம்.ஹரீஸ், மாகாண சபை உறுப்பினா்களான ஏ.எம்.ஜெமீல், ஏ.எல்.எம்.நஸீா், தயா கமகே உள்ளிட்ட மு.காவின் உள்ளுராட்சி மன்ற தலைவா்கள், உறுப்பினா்கள் எனப் பலரும் கலந்து கொண்டனா்.




SHARE

Author: verified_user

0 Comments: