அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான நியமன கடிதங்கள் இன்று (2014.12.30) தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நியமன கடிதங்களுக்கு பொறுப்பாகவுள்ள மாவட்டத் திட்மிடல் பணிப்பாளர் எஸ். அன்வர்தீன் தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய தேர்தல் தொகுதிகளில் 280 வாக்களிப்பு நிலையங்களில் 2912 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை விடுமுறைக் காலமாக இருப்பதனால் தேர்தல் கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கான நியமன கடிதங்கள் தபால் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உரிய தபால் நிலையங்களுக்கு சென்று தமது நியமன கடிதங்களை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment