19 Dec 2014

நாளைஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷகல்முனையில்

SHARE
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டம்  நாளை சனிக்கிழமை(20) காலை கல்முனை கடற்கரைப் பள்ளி முன்பாக  நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி  அமைப்பாளர் ஏ.எம்.றியாஸ் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளருமான ஏ.எம்.றியாஸ் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கல்முனை கடற்கரைப் பள்ளி  நாகூர் ஆண்டகை தர்காவை தரிசிக்கவுள்ளதுடன், அங்கு ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அன்றைய தினம் அக்கரைப்பற்று, அம்பாறை போன்ற பிரதேசங்களுக்கும் ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.(tm)
SHARE

Author: verified_user

0 Comments: