19 Dec 2014

சரியான அரசியல் தலைமைகள் இல்லாமையால் நம் நாட்டில் இடம்பெற்று வந்த கொடூர யுத்தம் 30ஆண்டு காலமாக நீடித்திருந்தது.

SHARE
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில்தான் இன உறவு வளர்க்கப்பட்டுள்ளதாக தேசிய காங்கிரஸின் தலைவரும்  உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கும் வைபவமும்; தேசிய காங்கிரஸின் தேர்தல் பிரசாரமும்  வியாழக்கிழமை(18) அட்டாளைச்சேனையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில்தான் முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்திகளைக் கண்டுள்ளன.
எம்மை நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ வைத்த ஜனாதிபதியை நாம் எச்சந்தர்ப்பத்திலும் மறக்க முடியாது.

மைத்திரி இனவாதம் பேசுபவர். அவர் ஒருபோதும் சிறுபான்மை இன மக்களை நேசிப்பதில்லை. அவருக்கு முஸ்லிம்கள வாக்களிக்கமாட்டார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படாவிட்டால் இந்நாட்டு முஸ்லிம்களின் நிலை கவலைக்குரியதாகிவிடும்.

கடந்த காலங்களில் சரியான அரசியல் தலைமைகள் இல்லாமையால் நம் நாட்டில் இடம்பெற்று வந்த கொடூர யுத்தம் 30ஆண்டு காலமாக நீடித்திருந்தது.  இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று 5ஆண்டு காலத்திற்குள் முடிவுக்கு கொண்டு வந்தார்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். வெளி மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்கள் சிங்கள மக்களுடன் ஒற்றுமையாக வாழ்வதற்கு கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஆதரவு வழங்கவேண்டும்.

சகலரும் கைகோர்த்து, வாழும் சமூகத்தை உருவாக்குவதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இலக்காகும்.

ஆண்டாண்டு காலமாக ஆட்சி அதிகாரங்களில் இருந்த ஆட்சியாளர்கள் அன்று நடைபெற்ற கொடூர யுத்தத்தை காரணம் காட்டி அரசியல் பிழைப்பை நடத்தினார்களே தவிர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து மக்களை பாதுகாக்கவில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐந்து ஆண்டு காலத்துக்குள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து மக்களையும் நாட்டையும்  பாதுகாத்துள்ளார்' என  அவர் மேலும் தெரிவித்தார்.(tm)     
SHARE

Author: verified_user

0 Comments: