மட்டக்களப்பு எகட் கரிதாஸ் அமைப்பின் ஏற்பாட்டில் மைக்ரோ கடன்
திட்டத்தில் ஈடுபடும் அரசசார்பற்ற அமைப்புகள் மற்றும் மாதர்
சங்கங்களுக்கான செயற்பாடுகள் தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு ஆரையம்பதி
விதாதா வள நிலையத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் அமைப்பின் நிர்வாக
பிரிவு முகாமையாளர் என்.மனோகரன் தலைமையில்
நடைபெற்றது.
இப்பயிற்சியின் ஆரம்பநிகழ்வில் எகட் கரிதாஸ் அமைப்பின் இயக்குனர் ஜிரோன்
டிலிமா ,பொறுப்பாளர் சுமதி ஊடக பொறுப்பாளர் மைக்கல் வளவாளராக
மகாசக்திஅமைப்பின் வளவாளர் எஸ்.சொர்ணலிங்கம் மற்றும் மண்முனைபற்று
பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சமூர்த்தி
உத்தியோகத்தர் ,பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டு
சமூகத்தின் மத்தியில் நுண்கடன் நிதிவசதியின் மக்கள் எதிர் நோக்கும்
பிரச்சினைகள் ,நுண்கடன் திட்டத்தின் கொள்கை நடைமுறைகள் போன்ற விடயங்கள்
தொடர்பாக பயிற்றுவித்தமை குறிப்பிடத்தக்கது.

.jpg)
0 Comments:
Post a Comment