திருகோணமலை மாவட்டத்தின் கொட்டியாரக்குடா கடலில் படகு மூழ்கியதால்,
காணாமல்; போன மீனவரான கேணிக்காட்டைச் சேர்ந்த ஹுஸைன்தீன் முஹம்மது பாஹில்
(வயது 34) என்பவரின் சடலம் திங்கட்கிழமை (22) காலை சூடாக்குடா கடற்கரையில்
மீட்கப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். கடலில் மீன்பிடிப்பதற்கு விடப்பட்டிருந்த வலையை மீண்டும் எடுப்பதற்கு சனிக்கிழமை (20) இவர் சென்றதாகவும் இதன்போது, இவரது படகு கடலில் மூழ்கியதுடன், இந்த மீனவரும் காணாமல் போனார். இந்த நிலையிலேயே இவரது சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினார்.
0 Comments:
Post a Comment