22 Dec 2014

சீரற்;ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் உதவி வழங்க நடவடிக்கை

SHARE
அதிக மழையுடன் கூடிய வானிலையை அடுத்து அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள 300 சிறு வாவிகள் அபாய நிலையை அடைந்துள்ளதாக கமநல அபிவிருத்தித் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே வாவிகளை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பிரதம அதிகாரி பிரபாத் வித்தாரண கூறியுள்ளார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சொந்தமான 2,481 வாவிகளில் அநேகமானவை தற்போது  வான் பாயத்தொடங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து குறித்த அதிகாரிகளை தகுந்த நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: