30 Dec 2014

மாற்றுத்திறனாளிகள் தின விழாவும், மலர் வெளியிடும் இன்று

SHARE
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் பிரிவின் ஏற்பாட்டில், மாற்றுத்திறனாளிகள் தின விழாவும், 'தடைகளே படிகளாக' மலர் வெளியிடும் இன்று செவ்வாய்க்கிழமை (30) மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ், கௌரவ அதிதிகளாக, ஹண்டிகப் இன்ரநெசனல் நிறுவனத்தின் உதவி நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் ரி. பகீரதன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ். அருள்மொழி, மாற்றுத்திறனாயான ஆசிரியர் என். இருதயராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தரிசனம், வாழ்வோசை, ஓசாணம், மென்கப், புகலிடம் மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்வுகளும் இந்நிகழ்வில் இடம்பெற்றன.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் மாற்றுத் திறனாளிகள் தின விழாவுக்கென வெளியிடப்பட்ட தடைகளே படிகளாக மலருக்கு பங்களிப்புச் செய்த மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன, பிரதேச செயலகப்பிரிவில்  தெரிவு செய்யப்பட்சிறந்த முதியோர் சங்கங்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன(nl)





SHARE

Author: verified_user

0 Comments: