ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக தமது தெளிவான நிலைப்பாட்டை அறிவித்தமைக்காக
அமைச்சர் அதாவுள்ளா மற்றும் அமைச்சர்; ஹிஸ்புள்ளா போன்றோர்
பாராட்டுக்குரியவர்கள் என உலமா கட்சித்தலைவர் காநிதி முபாறக் அப்துல் மஜீத்
மௌலவி குpறப்பிட்டார்.
ஒரு அரசியல் கட்சியாயின் அல்லது அரசியல்வாதியாயின் முடிவொன்று எடுத்தால்
தமது கருத்தில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். அவ்வாறின்றி;
தடுமாற்றம் கொண்டவர்களால் மக்களுக்கான உறுதியான அரசியலை ஒரு போதும்
முன்னெடுக்க முடியாது.
நமது முடிவில் வெற்றியும் வரலாம் தோல்வியும் வரலாம். அது இறைவன்
புறத்தில் உள்ள விடயம். மனிதர்களாகிய நாங்கள் உள் புற காரணிகளை முன்வைத்து
ஆராய்ந்து முடிவெடுத்;தால் அதில் உறுதியாக இருக்க வேண்டும். இறுதித் தூதர்
முஹம்மது நபியவர்கள் ஏதேனும் ஒரு விடயத்தில் முடிவெடுத்து விட்டால்
அம்முடிவுக்கு உடனிருக்கும் அனைவரும் எதிர்த்தாலும் தாம் அந்த முடிவில் சரி
கண்டிருந்தால் அதில் அவர் உறுதியாக இருப்பார்கள்.
இன்று சில முஸ்லிம் கட்சிகளை பார்க்கிறோம். அவர்கள் ஜனாதிபதி தேர்தலில்
யாரை ஆதரிப்பது என முடிவெடுத்து விட்டு அந்த முடிவை அறிவிக்க
தைரியமில்லாமல் தினமும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டம் கூட்டி
மக்களை ஏமாற்றுகின்றனர். இத்தகையவர்களால் எவ்வாறு மக்களுக்கான துணிச்சல்
மிக்க அரசியலை கொண்டு செல்ல முடியும்?
இந்த வகையில் அமைச்சர் அதாவுள்ளாவும் அமைச்சர் ஹிஸ்புள்ளாவும் தமது
நிலைப்பாடுகளை தெளிவாக மக்கள் முன் வைத்தமை பாராட்டுக்குரியதாகும்.
மக்களிடம் நடிப்புக்காட்டாத இத்தகைய அரசியல்வாதிகளை உலமா கட்சி
பாராட்டுகின்றது.
எமது கட்சிக்கும் அவர்களுக்குமிடையில் அரசியல் வேறுபாடு இருக்கலாம்.
ஆனாலும் மக்களை ஏமாற்றாமல் அரசியல் செய்வோரை பாராட்டுவது நமது பண்பாடாகும்
என தெரிவித்தார்.(mm)

0 Comments:
Post a Comment