காமிலா பேகம்-
தொடர்ந்து பெய்து வரும் மழை வெள்ளம் காரணமாக வாழைச்சேனை நாவலடி பிரதேசத்தில் இதுவரை ஆதம்பாவா சவரியத்து என்பவரின் 11 மாடுகளும்இ அலியார் பௌசியா என்பவரின் 8 ஆடுகளும்இ அப்துல் கனி பதுறு நிஸா என்பவரின் 15 ஆடுகளும் இ வாஹித் என்பவரின் 6 ஆடுகளும் மேலும் பலரின் கால்நடைகளும் நோய்வாய் பட்டுள்ளன.
இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் விவசாயம் கால்நடை வளர்ப்பில் பெரும்பாலும் ஈடுபடுபவர்கள்.தற்போதைய அடைமழை காரணமாக இவர்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது இவர்களின் வருமானத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் வசிப்பிடத்தில் செய்யும் தொழில்கள் காரணமாக மழையினால் பாதிப்புக்குள்ளான குடியிருப்புகளிலேயே கால்நடைகளுடன் வசிக்கின்றனர்.தொடர்ந்து பெய்துவரும் மழை நீரினால் சேனைப்பயிர்ச் செய்கைகளும் அழிந்துள்ளன. தூரப்பகுதிகளுக்கான போக்குவரத்துகளும் தடைப்பட்டிருப்பதால் கூலித்தொழில் செய்யகூடிய தொழிலாளர்களும் வருமான
பாதிப்புக்குளளாகியுள்ளனர். இப்பகுதியில் கொழும்பு வீதியால்
செல்லும் வாகனங்கள் தடைப்பட்டதால் பல ஹோட்டல்களும்
மூடப்பட்டிருக்கின்றன. ஹோட்டல் தொழிலை நம்பி வாழும் சிறு
கைத்தொழிலாளர்களும் ஹோட்டல் கூலித்தொழிலாளர்களின் குடும்பங்களும்
வருமானமற்ற நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.
0 Comments:
Post a Comment