நாவலடி -காமிலா பேகம்-
கோறளைப்பற்று மேற்கு காவத்தமுனையில் வெள்ளம் காரணமாக நேற்று வரை (27/12/2014) சுமார் 176 பேர் அகதிகளாக பாடசாலையிலும், மிகுதி சுமார் 27 குடும்பங்கள் இளைஞர் கழக கட்டிடத்திலும் இடம்பெயர்ந்துள்ளனர். அதில் ஒரு சிலருக்கு விசேடமாக உதவி செய்ய வேண்டிய அவசர சூழ்நிலையில் காணப்பட்டார்கள்
கோறளைப்பற்று மேற்கு காவத்தமுனையில் வெள்ளம் காரணமாக நேற்று வரை (27/12/2014) சுமார் 176 பேர் அகதிகளாக பாடசாலையிலும், மிகுதி சுமார் 27 குடும்பங்கள் இளைஞர் கழக கட்டிடத்திலும் இடம்பெயர்ந்துள்ளனர். அதில் ஒரு சிலருக்கு விசேடமாக உதவி செய்ய வேண்டிய அவசர சூழ்நிலையில் காணப்பட்டார்கள்
இது குறி
ஆதம்பாவா ராகிலா :-
"எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர் .அதிலும் எனது மூன்றாவது குழந்தை பிறந்து ஒரு வாரம் இல்லை எனது வீட்டிற்கு வெள்ளம் புகுந்து விட்டது. எனது குழந்தைகளை இக்குளிரிலிருந்து காப்பாற்ற சரியான உடைகளும் போதுமானதாக இல்லை இந்த நிலமையில் எனது தற்போது பிறந்துள்ள குழந்தையின் தொப்புளில் கிருமித்தொற்றும் ஏற்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு முன்பே எனது கணவனால் கைவிடப்பட்டு விட்டேன் எனக்காக உதவுவதற்கு யாராவது இந்த நேரத்தில் முன் வந்தால் மிக்க மகிழ்ச்சியே "
மேலும் ஒரு மூதாட்டி (வயது 77). நிலத்தில் ஒரு துணி விரித்து படுக்கையில் மெல்லிய ஒரு புடவையால் போர்த்திக்கொண்டு கால்கள் இரண்டும் முடங்கிய நிலையில் நடுங்கியபடி படுத்திருந்தார் ஒரு பக்கம் ஒரு வாளியில் சலம் செல்வதற்கான குழாயுடன் கூடிய பை போடப்பட்டிருந்தது.
அவரிடம் வினவிய போது
மிகவும் மெல்லிய குரலில் "நான் மீராவோடையில் பிறந்து வாழ்ந்தவள் சிறு நீரக நோயுடன் கால்கள் முடங்கி நடக்க முடியாதபடி படுக்கை நோயாளியாகிவிட்டேன் தொடர்ந்து வைத்தியசாலையில் வைத்து கவனிக்க எனக்கு உதவிகள் இல்லை வைத்தியர்கள் சலம் செல்வதற்கான பையையும் எனக்கு இணைத்துள்ளனர்.எனது உறவுகள் வெள்ளம் காரணமாக என்னை இங்கே போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
ஒரே நேரத்தில் கடும் குளிர், பசி நோயின் கொடூரம் அனைத்தையும் இவ்வேளையில் தாங்க முடியாதுள்ளது . இவயனைத்தையும் விட யாராவது எனக்கு ஒரு சக்கர நற்காலியாவது தருவதற்கு உதவி செய்வீர்களா? " என கண்ணீர் மல்க பரிதாபகரமாக கெஞ்சினார்.
இதில் வேதனையான விடயமென்னவென்றால் சிறுநீர் சேகரிக்கும் பையை உயரமான வாளியில் போட்டிருந்ததால் இந்த வயது முதிர்ந்த நோயாளியால் சிறுநீர் கழிப்பதில் மிகவும் சிரமத்தை அனுபவிப்பதை கண்கூடாக தெரிந்தும், யாரும் நேற்று பகல்வரை கவனத்தில் எடுக்கவில்லை அயினும் பின்னர் நான் இந்த விபரங்களை சேகரித்து அவரை புகைப்படம் எடுத்த பின்பு, அந்த முகாமிலிருந்த ஒருவர் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றதாக அறிய முடிந்தது. ஆயினும் அந்த மூதாட்டி எதிர்பார்த்த உதவிகளை யாராவது செய்வார்களா?
மேலும் ஒரு முகாம். பதுரியா நகர் அல் மினா வித்தியாலய அகதிகளில் அச்சி முஹமது ரம்சியா (வயது 27) கண்களிரண்டும் பார்வையிழந்த நிலையில் தாயாருடன் தட்டுத்தடுமாறி நின்றார் .
ரம்சியாவிடம் விபரம் கேட்ட போது :-
"கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் வரை எனக்கு பார்வையில் எந்த குறையுமில்லை திடீரென எற்பட்ட தலை சுற்றில் நான் விழுந்த பின் தான் முற்றாக பார்வையின்றி தவிக்கிறேன். நான் ஒரு விதவை ஒரு குழந்தைக்கு தாய் வறுமையிலிருந்து காப்பாற்ற எனது தயார் ஸபியா உம்மா (வயது 60) தான் தட்டு பாய் இழைத்தல் மூலமும் கோழி வளர்ப்பு மூலமும் என் குடும்பத்தையும் இயலாத எனது தந்தையையும் (வயது 75) கவனிக்கின்றார் .
எனக்கு எந்த வைத்தியம் செய்வதானாலும் எம்.ஆர்.ஐ பரிசோதனை முடிவுகளின் படிதான் கண்களுக்கு வைத்திய செய்யலாம். என நரம்பியல் நிபுணர் ரிப்ஸி என்பவர் அறிவுறுத்தியுள்ளார் எனது ஏழ்மையின் காரணமாக இப்பரிசோதனைக்கு தேவைப்படும் குறைந்தது இருபதாயிரம் ரூபாவை என்னால் திரட்ட முடியாதுள்ளது.
கடைசி 15/1/2015 ற்கு முன்பு எம்.ஆர்.ஐ. பரிசோதனை செய்ய வேண்டும் . இந்த உதவியை யாரிடமாவது பெறுவதற்கு உதவுங்கள்" என தனது சோகக்கதையுடன் பண உதவியை விரைவில் பெற்று தருமாறு பணிவாக வேண்டி நின்றார்.
வசதியான வானில் சிறகடிக்கும் அன்பான நெஞ்சங்களே! இக்கதைகளை வாசித்தால் உங்கள் சிறகுகள் தன்னால் அடங்கிவிடும். இதை ஊடகங்களில் வாசிக்கக் கிடைக்கும் உங்களில் யாராவது அவசரமாக உதவ முடிந்தால் அது இந்த பரிதாபமான விதவைகளின் வாழ்வில் பேருதவியாக அமையுமல்லவா?
0 Comments:
Post a Comment