திக்கோடை கிராம மக்களின் சுகாதார தேவையினைக் கருத்தில் கொண்டு திக்கோடை கிராமத்தின் கிராம சேவை உத்தியோகஸ்தர் எஸ்.சத்தியசோதியின் வேண்டுகோளுக்கமைய இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக்கிளை, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையுடன் இனைந்து இந்த நடமாடும் வைத்தி முகாமை நடாத்தியிருந்தது.
இதன்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தலைலைமையிலான வைத்திய குழுவினர் கலந்து கொண்டு நோயாளர்களுக்கு சிகிச்சையளித்தனர்.
இதற்போது திக்கோடைக் கிராமத்தைச் சேர்ந்த 80 இற்கு மேற்பட்ட நோயாளர்கள் பயனடைந்துள்ளனர்.
மழை வெள்ளத்தில் ஏற்பட்ட காயங்கள், மற்றும் காய்ச்சல் போன்ற அதிகமான நோய்களுக்கு இதன்போது சிகிச்சையழிக்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் கூறினார்.
0 Comments:
Post a Comment