14 Dec 2014

வறிய மக்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்புவதில் ஜனாதிபதி மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்

SHARE
ஜனாதிபதி; மஹிந்த ராஜபக்ஷ வரிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டி எழுப்புவதில் மிகவும் அக்கறையுடன் செயற் பட்டு பல்வேறு செயல் திட்டங்களை முன்மொழிந்து அதற்கான நிதிகளையும் வழங்கி வருகின்றார் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் ஜே.பி. தெரிவித்தார்.

அம்பாரை கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடனும்,நீலாவணை கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் பங்குபற்றுதலுடனும் மருதமுனை நன்னீர் மீன்பிடி விரிவாக்கற் சேவைச் சங்கம் முன்னெடுக்கவுள்ள நன்னீர் மீன் வளர்ப்புத்திட்டத் மருதமுனை கரச்சைக் குளத்தில்  ஆரம்பித்து உரையாற்றிபோதே இஸட்.ஏ.எச்.றஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.

அதிதிகளாக நீலாவணை கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் டி.விநோதன்,கல்முனை பிரதேச செயலக திவிநெகம முகாமையாளர் ஏ.சி.அன்வர் ஆகியோர்; கலந்து கொண்டனர். பிரதம அதிதி; மற்றம் கலந்து கொண்;ட அதிதிகள் குளத்தில் மீன் குஞ்சுகளை விட்டு இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்

முதற் கட்டமாக இருபதாயிம் மீன் குங்சுகள் குளத்தில் விடப்பட்டது. மருதமுனை நன்னீர் மீன்பிடி விரிவாக்கற் சேவைச் சங்க உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இங்கு பிரதம அதிதி இஸட்.ஏ.எச்.றஹ்மான் மேலும் உரையாற்றுகையில் :- நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டம் மிகவும் பயனள்ளதாகும் இந்தத் திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தினால் நல்ல இலாபத்தைப் பெறமுடியும். ஆகவே சங்க உறுப்பினர்கள் மிகவும் அக்கறையுடன் செயற்படவேண்டும்.
ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்ஷ வரிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டி எழுப்புவதில் மிகவும் அக்கறையுடன் செயற் பட்டு பல்வேறு செயல் திட்டங்களை முன்மொழிந்து அதற்கான நிதிகளையும் ஒதுக்கி திவிநெகும மூலம் நாட்டின்; எல்லாப் பாகங்களிலும் பல தொழில் துறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.என அவர் மேலம் தெரிவித்தார்.(mm)

SHARE

Author: verified_user

0 Comments: