வாழ்வாதார
திட்டத்தின் கீழ் திவிநெகும உதவிபெறும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த
வறிய குடும்பங்களுக்கு வீடுகளை திருத்துவதற்கான வீட்டு மானிய உதவி வழங்கும்
நிகழ்வு காங்கேயனோடை அல்-அக்ஷா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்கத்தின்
ஆரையம்பதி பிரதேச திவிநெகும பொறுப்பாளர் ஆர். இராசலிங்கம் தலைமையில்
இடம்பெற்ற இந்நிகழ்வில்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின்
தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான
எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்படி திவிநெகும
பயனாளிகள் 600 பேருக்கு வீட்டு மானிய உதவித் தொகை 2500 ரூபா வீதம் வழங்கி
வைத்தார்.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின் ,வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்கத்தின் ஆரையம்பதி பிரதேச திவிநெகும உத்தியோகத்தர்கள் உட்பட திவிநெகும பயனாளிகளும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

0 Comments:
Post a Comment