மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் மரணதண்டனை
விதிக்கப்பட்ட நிலையில் 14 வருடங்களாக தேடப்பட்டு வந்த ஒருவரை
சந்திவெளியிலுள்ள அவரது வீட்டில் சனிக்கிழமை (13) இரவு கைதுசெய்ததாக
குற்றப்புலனாய்வுக் குழுவின் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
2001ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளிப் பிரதேசத்தில் தம்பிராசா விக்னேஸ்வரன் என்ற 22 வயது இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தக் கொலைக் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் சந்திவெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த கைதுசெய்யப்பட்ட இந்த நபர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இவர் தனது இயற்பெயரை மாற்றி தலைமறைவாக வாழ்ந்துவந்துள்ளார்.
இக்கொலையுடன் தொடர்புடையவர்களான மேற்படி நபரின் தாய், தந்தை, சகோதரன் ஆகியோர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு வெலிக்கடைச் சிறையில் தண்டனை அனுபவித்து வருவதாக மேலும் அவர் கூறினார்.(tm)

0 Comments:
Post a Comment