14 Dec 2014

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்குமோட்டார் சைக்கிள்கள் வழங்கிவைப்பு

SHARE

மட்டக்களப்பு,  திருகோணமலை மற்றும் கந்தளாய் ஆகிய  பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களில்  கடமையாற்றும் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு  மோட்டார் சைக்கிள்கள் ஞாயிற்றுக்கிழமை (14)  வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு  பொலிஸ் அத்தியட்சகர் வளாகத்தில்  நடைபெற்ற இந்த நிகழ்வின்போது 100 ஆண் பொலிஸ் சிரேஷ்ட  உத்தியோகஸ்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்களும்   49 பெண் பொலிஸ் சிரேஷ்;ட உத்தியோகஸ்தர்களுக்கும் ஸ்கூட்டி பப் ரக மோட்டார் சைக்கிள்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மங்கள முனசிங்க, மட்டக்களப்பு அம்பாறை மாவட்
டங்களுக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ன, மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் உப்புல் ஜெயசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: