20 Dec 2014

மட்டக்களப்பில் பலத்த மழை - படங்கள் விபரங்கள் இணைப்பு

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வெள்ளிக் கிழமை (19) முதல் பலத்த மழை பெய்து வருகின்றது இதனால் மாவட்டத்திலுள்ள தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் நேற்று வெள்ளிக் கிழமை காலை 8.30 மணியிலிருந்து இன்று காலை 8.30 மணி வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பில் 147.8 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களபு மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கூறினார்.

இந்நிலையில் உன்னிச்சைக் குளம் 30 அடி 4 இஞ்சி, வாகனேரிக்குளம் 20 அடி 2 இஞ்சி,  தும்பங்கேணிக்குளம் 17 அடி 6 இஞ்சி, கித்துள்வௌக்குளம் 9 அடி 2 இஞ்சி, கட்டுமுறிவுக்குளம் 11 அடி 9 இஞ்சி, உறுகாமம் குளம் 17 அடி 2 இஞ்சி, நவகிரிக்குளம் 32 அடியும், வெலிக்காக் கண்டிக்குளம் 16 அடி 5 இஞ்சியும், வடமுனைக்குளம் 13 அடியும், நீர் மட்டம் உள்ளதாக அந்தக் குளங்களுக்குப் பெறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வருகின்ற பலத்த மழையினால் பாதிப்புக்கள் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துப பிரிவு தெரிவிக்கின்றது.


















SHARE

Author: verified_user

0 Comments: