20 Dec 2014

பாதுகாப்பான உபகரணங்கள்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேசசபை சுகாதார ஊழியர்கள் 13 பேருக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான  பாதுகாப்பான உபகரணங்களை  வாகரை வேள்ட்விசன் நிறுவனம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை வழங்கியது.

மழைக்காலத்தில் அணியக்கூடிய மேலங்கி, பாதுகாப்பான காலணி, மற்றும் கையுறைகளை வழங்கியது.  நேற்றைய தினம் புதன்கிழமை பகல் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது உலக தரிசன நிறுவனத்தின் வாகரை வலயத்தின் திட்ட இணைப்பாளர் கிறிஸ்டி ஜெயானந்தன், பிரதேச சபையின் செயலாளர் சிவலிங்கம் இந்திரகுமார், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: