14 Dec 2014

அன்னை சாரதாதேவியின் 162ஆவது ஜனன தினவிழா

SHARE
 தூய அன்னை சாரதாதேவியின் 162ஆவது ஜனன தின விழா நிகழ்வுகள் சனிக்கிழமை (13) மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ணமிசனில் நடைபெற்றது.

இல்ல மாணவர்களினாலும் கிழக்கு பல்கலைக்கழக அழகியற் கற்கைகள் நிலைய மாணவிகள், விவேகானந்தா மகளிர் மகாவித்தியாலய மாணவிகள் மற்றும் ஆசிரியர்களால் பஜனை மற்றும் பக்திப் பாடல்கள் பாடப்பட்டன.

மங்களாரதி, பூஜை, சொற்பொழிவு என்பன இராமகிருஷ்ணமிசன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தா தலைமையில் இடம்பெற்றன.
மதுரையிலிருந்து வருகை தந்த  சுவாமி பிரபு பிரேமானந்தாவால் ஹோமம் வளர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



SHARE

Author: verified_user

0 Comments: