16 Dec 2014

ஐக்கிய தேசியக் கட்சியினால் பட்டிருப்புத் தொகுதிக்கு புதிய அமைப்பாளர் நியமனம்

SHARE
ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் மட்டக்களப்பு பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் துரிதப் படுத்தப் பட்டுள்ளதாகவும், அதற்காக வேண்டி தமது கட்சி சார்பாக பட்டிருப்புத் தொகுதிக்கு புதிய அமைப்பாளர் ஒருவர் நியமிக்கப் பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அ.சசிதரன் கூறினார்.


ஐக்கிய தேசியக் கட்சி பட்டிருப்புத் தொகுதியில் முன்னெடுத்துள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வேலைத் திட்டங்கள் தொடர்பில் இன்று செவ்வாய்க் கிழமை(16) காலை மேற்படி அ.சசிதரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.


இவ்விடையம் தொடர்பில் சசிதரன் மேலும் தெரிவிக்கையில்……..


மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளராக தி.சத்தியசீலன் கடந்த 8 ஆம் திகதி முதல் நியமிக்கப பட்டுள்ளர்.


மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தொகுதிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைப்பாளர் இல்லாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில்  ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக்கான அமைப்பாளராக இதுவரைகாலமும் செயற்பட்டு வந்த ஏ.ரி.மாசிலாமணி கல்குடா தொகுதிக்குரிய அமைப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.


இந்நிலையில்தான் தமது கட்சியுடன் சேர்ந்து மிக நீண்டகாலமாக அரசியல் பணியில் ஈடுபட்டு வந்த தி.சத்தியசீலன் என்பவரை பட்டிருப்புத் தொகுதிக்குரிய புதிய அமைப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குகுழு கடந்த 8 ஆம் திகதி அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அ.சசிதரனின் இல்லத்தில் கூடியபோதே இம்முடிவு எடுக்கப் பட்டுள்ளது.


இனிவரும் காலங்களில் தி.சத்தியசீலனூடாக பட்டிருப்புத் தொகுதியில் தமது கட்சி நடவடிக்கைகளையும், ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அ.சசிதரன் மேலும் கூறினார்.


இதேவேளை இந்நியமனம் குறித்து சத்தியசீலனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது….

தம்மை பட்டிருப்புத் தொகுதிக்குரிய ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராக நியமிக்க கட்சியின் மட்டு.மாவட்ட செயற்குழு முடிசெய்துள்ளதாகவும், தனது தலைமைத்துவத்தின் கீழ் பட்டிருப்புத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தி.சத்தியசீலன் குறிப்பிட்டார்.
SHARE

Author: verified_user

0 Comments: