கடந்த வருடங்களில் நடைபெற்ற தேர்தல்களைவிட இம்முறை நடைபெறுகின்ற ஜனாதிபதித் தேத்தல் தொடர்பில் கல்குடா தொகுதிவாழ் தமிழ் மக்கள் மிகவும் அரசியல் ரீதியில் விழிப்புடன் இருக்கின்றார்கள். அதனடிப்படையில் வர இருககின்ற ஜனாதிபதித் தேர்தலில் கல்குடா தொகுதிவாழ் தமிழ் மக்கள் நூற்றுக்கு நூறு வீதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கே வாக்களிப்பார்கள் என்பதில் எதுவித ஐய்மும் இல்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தொகுதிவாழ் தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பாகவும், அப்பகுதிவாழ் மக்கள் வர இருக்கின்ற ஜனாதித் தேர்தல் தொடர்பாக கொணடுள்ள நிலைப்பாடுகள் தொடர்பாகவும், இன்று செவ்வாய் கிழமை (16) காலை சந்திரபாலவை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்……
மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தொகுதியிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஜனாதிபதித் தேத்தலை எதிர் பார்தவண்ண முள்ளனர். இப்பகுதியிலே வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கே வாக்களிப்பார்கள் என்பதை நான் உறுதியாகக் கூறிக் கொள்கின்றேன்.
இப்பகுதியில் கடந்த பல தேர்தல்களிலும் பல வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றிருந்தாலும், இம்முiறை நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கல்குடா தொகுதியில் எதுவித வன்முறைகளுமில்லாமல் மக்கள் சிந்தித்து நிதானமாக வாக்களிக்கவுள்ளனர்.
தற்போதைய நிலையில் தமிழ் மக்கள் உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால்தான். எனவே மஹிந்த ராஜபக்சவுக்கு இம்முறை தமிழ் மக்கள் அனைவரும் வாக்களித்து நன்றிக் கடன் செலுத்தவுள்ளனர். ஏனைய கட்சிகள் எவ்வாறு முடிவெடுத்து செயற்பட்டாலும் எமது தமிழ் மக்கள் அனைவரும் குறிப்பாக கல்குடா தொகுதிவாழ் தமிழ் மக்கள் அனைவரும் மஹிந்த ராஜபக்சவைத்தான் ஆதரிக்கவுள்ளனர்.
கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களையும், ஏனைய அரசியல் நடவடிக்கைகளையும் சரியான முறையில் தமிழ் மக்கள் பயன்படுத்தாத காரணத்தினால்தான் தற்போது தமிழ் சமூகம் பின்நோக்கிக் சென்று கொண்டிருக்கின்றது. எனவே அனைத்து தமிழ் மக்களும், எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்க வேண்டும்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் எப்போதும் அவர்களது சமூகம் சார்ந்து சிந்தித்து செயற்பட்டுக் கொண்டிக்கின்றார்கள் ஆனால் தற்போததான் எமது தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் சமூகத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியுள்ளார்கள்.
ஏதிர் காலத்தில் எந்தவித தேர்தல்களிலும் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இதுவரையில் வரவில்லை ஆனால் எமது தமிழ் சமூகத்தை மென்மேலும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நிலையில்தான் எனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றேன். என அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment