தமிழரின் பல பிரச்சினைகள் இந்த அரசாங்கத்தினால்
தீர்த்துவைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகரும் தமிழ் மக்கள்
விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்
தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேச அலுவலகம் சித்தாண்டியில் சனிக்கிழமை (06) திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
'மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கத்தினால் தமிழரின் பல பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்பட்டன. அத்துடன், தீர்க்கப்படாதுள்ள முக்கியமான பிரச்சினைகளும் இந்த அரசாங்கத்தினாலேயே தீர்த்துவைக்கப்படும். இந்தப் பிரச்சினைகளை வேறு எவராலும் தீர்த்துவைக்கமுடியாது.
அதிகாரப்பகிர்வு என்ற விடயத்தில், 2008ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை நாம் மிகச் சிறந்த முறையில் செய்தோம். இதனை ஏற்படுத்தித் தந்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவே.
அக்காலத்தில் 'கிழக்கின் நவோதயம்' போன்ற பல பாரிய அபிவிருத்தித்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு தற்போதும் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அபிவிருத்திகள் அனைத்தும்; இந்த அரசாங்கத்தினாலேயே சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறு சிறந்த ஆட்சி செய்து, மக்களை நிம்மதியாக வாழவைத்த இந்த ஆட்சியை எதற்காக மாற்றவேண்;டும்?
புதிய ஒருவர் ஜனாதிபதியாக வந்தால், மாற்றங்கள் வருமென்று சிலர் நினைக்கலாம். எவ்வாறிருந்தாலும், தேசிய ரீதியில் சில மாற்றங்கள் ஏற்படுமே தவிர, சிறுபான்மையினருக்கு அதாவது, தமிழருக்கு எந்த மாற்றமும் வராது.
எதிரணியில் கூட்டுச்சேர்ந்த ஒவ்வொருவரும், ஒவ்வொரு நிலைப்பாடு உடையவர்கள். இக்கூட்டுக் கட்சியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சுயமாக இயங்கமுடியாதவர்.
நாம் அனைவரும் சரியாகச் சிந்தித்து, இந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கவேண்;டும்' எனக் கூறினார்.

0 Comments:
Post a Comment