14 Dec 2014

நிறைவேற்று அதிகார முறையே சிறுபான்மை மக்களுக்கு சரியான உபாயமாகும்

SHARE
நிறைவேற்று அதிகார முறையே சிறுபான்மை மக்களுக்கு சரியான உபாயமாகும். அதன் மூலமே சிறுபான்மை மக்கள் தங்களது தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சிறுபான்மை மக்களாகிய தமிழர்களும் முஸ்லீம்களும் ஒரு நாட்டினுடைய அரசியல் தலைமையினை  தெரிவு செய்கின்ற விடயத்தில்  தொடர்சியான தவறுகளை விட்டு வருகின்றோம். இந்த தவறுகள் இந்த மக்களை வழி நடாத்துகின்ற சில அரசியல் தலைமைகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த அரசியல் தலைமைகள் அவர்களது சுகபோகங்களுக்காக மக்களை பற்றி எந்தக் கவலையும் இல்லாது அரசியல் பிழைப்புக்களை நடாத்தி வருகின்றனர்.

இவ்வாறான தேர்தல் கால அரசியல் தலைமைகள் பற்றி பொதுமக்கள் விழிப்படைய வேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு அதற்காக அரசியல் கட்சிகள் தீவிர செயற்பாட்டில் இறங்கியுள்ளன.

இக்காலகட்டத்தில், முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானமாகவும் எமது நாட்டின் மீது அக்கரை செலுத்தகின்ற அரசியல் தலைமைகளுக்கு எமது வாக்குரிமைகளை வழங்கி அந்த அணியின் வெற்றியில் நாம்; பங்காளிகளாக மாற வேண்டும். மேலும், தொடர்ச்சியாக நாம் பொரும்பான்மை மக்களின் குற்றப்பார்வைக்கு ஆளாகக்கூடாது.

எமது தேவைகளை நிறைவேற்றுவதற்கு மட்டும் பயன்படுத்திவிட்டு தேர்தல் காலத்தில் மற்றொருவருக்கு வாக்களிப்பது என்பது கவலைக்குரிய விடயம். இதனால், எமது சமூகம் தரக்குறைவாக நோக்கப்படுகின்றது.

இந்த முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யார் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பொரும்பான்மை மக்களால் வெற்றி பெறுவது உறுதியாகும்.

மேலும், சிறு பிள்ளைத்தன அரசியல் பிழைப்பு நடாத்தும் ஒரு கூட்டத்தின் பின் சென்று, அவர்களின் சுகபோகங்களுக்காக நாம் எமது சமூகத்தையும் எதிர்கால சந்ததியினரையும் காட்டிக் கொடுத்து விடக் கூடாது.

ஓரு நாட்டின் அரசியல் தலைமையை தீர்மானிப்பது என்பது சாதாரண விடயமாகாது அவற்றில் பல்வேறுபட்ட உபாயங்கள் மறைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

மௌலவி கே.எம்.கே.றம்ஸீன் காரியப்பர் தலைமையில்,  சம்மாந்துறை திராசாதில் இஸ்லாம் அரபுக் கல்லூரியில் சனிக்கிழமை (13)  நடைபெற்ற வைபவம் ஒன்றில் பிரதம அதீதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: