14 Dec 2014

அம்பாறை மாவட்டத்தில் தபால்மூல வாக்களிப்புக்காக 25 ஆயிரத்து 470 விண்ணப்பங்கள்'

SHARE
2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தபால்மூல வாக்களிப்புக்காக 25 ஆயிரத்து 470 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் திலின விக்கிரமரத்ன, வெள்ளிக்கிழமை(12) தெரிவித்தார்.

தபால் மூல வாக்காளர் விவரம் தொடர்பாக அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் பூரணப்படுத்துவதில் ஏற்பட்ட தவறுகள் பிழைகள் மற்றும் தாமதம் காரணமாக 3 ஆயிரத்து 184 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், 22 ஆயிரத்து 286 விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய  அம்பாரை தொகுதியிலிருந்து கிடைக்கப்பெற்ற 15 ஆயிரத்து 446 விண்ணப்பங்களில் 2 ஆயிரத்து 364 விண்ணப்பங்களும், கல்முனை தொகுதியிலிருந்து கிடைக்கப்பெற்ற 2 ஆயிரத்து 55 விண்ணப்பங்களில்  127 விண்ணப்பங்களும், சம்மாந்துறை தொகுதியிலிருந்து கிடைக்கப்பெற்ற 2 ஆயிரத்து 161 விண்ணப்பங்களில் 99 விண்ணப்பங்களும், பொத்துவில் தொகுதியிலிருந்து கிடைக்கப்பெற்ற  5 ஆயிரத்து 808 விண்ணப்பங்களில் 594 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டள்ளன.(tm)
SHARE

Author: verified_user

0 Comments: