20 Dec 2014

குறுகிய அரசியல் நோக்கம் ஒரு நாளும் வேண்டாம்

SHARE
குறுகிய அரசியல் நோக்கம் ஒரு நாளும் வேண்டாம். நாம் எங்களுடைய காலத்தில் செய்த அபிவிருத்திகள் போன்று வேறு ஒரு காலத்திலும் யாரும் செய்ததில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் பிரசாரம் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (19) நiபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த கால யுகத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியும். பல விதமான கஷ்டங்களுடன் இருந்தீர்கள். அது மாத்திரமல்ல சுனாமியினால் கஷ்டப்பட்டீர்கள். ஆனால் எமது அரசினுடைய அபிவிருத்திகள் ஊடாக பல விதமான நன்மைகளைப் பெற்றுத்தர எம்மால் முடியும் என்று முதலில் கூற விரும்புகின்றேன்.

நாம் பல மணித்தியாலங்களாக கடந்து வரவேண்டிய தூரங்கள் அனைத்தையும் குறுகிய காலத்துக்குள் கடந்து வந்திருக்கின்றோம். அது மாத்திரமல்ல பாதைகள், பாலங்கள், குடிநீர் வசதிகள் என அத்தியாவசிய வசதிகளைப் பெற்றுத் தந்திருக்கிறோம். இனிவரும் காலத்தில் எல்லா வீட்டுக்கும் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டிருக்கிறோம்.

இம்மாகாணத்தில் பல விதமான அபிவிருத்திகளை செய்திருக்கிறோம். முக்கியமாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி, விமான நிலைய அபிவிருத்திகள் மூலம் பெருமளவான வேலைவாய்ப்புக்களை உருவாக்கியிருக்கிறோம்.

அது மாத்திரமல்ல விவசாயப் பெருங்குடி மக்களுக்கு பலவிதமான உதவிகளை வழங்கி, அவர்களது வாழ்க்கையை சிறப்பாக நடத்துவதற்கு வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறோம். நெல் விளைச்சல் வந்தவுடன் அதனை சரியான விலைக்கு கொள்வனவு செய்யாது அவர்கள் விரும்பிய விலைகளுக்கு கொள்வனவு செய்தார்கள். அந்த நிலையை மாற்றுவதற்காக நெல் சந்தைப்படுத்தும் சபையை வலுப்படுத்தினோம்.

பாடசாலை செல்லும் பிள்ளைகளின் வசதிகளுக்காக மஹிந்தோதைய விஞ்ஞான ஆய்வு கூடங்களை ஏற்படுத்தி, கல்வியை மேம்படுத்தி வளப்படுத்த ஏற்பாடுகள் செய்திருக்கிறோம்.

நாங்கள் இந்நாட்டில் அரச சேவைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளோம். கடந்த காலத்தில் இருந்த அரசுகள் அரச சேவைகளில் இருந்த 6 தொடக்கம் 7 இலட்சமானவர்களை 3ஆகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முயன்றனர். அதனை நாங்கள் 15 இலட்சமாக அதிகரித்துள்ளோம். அது மாத்திரமல்ல கடந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம், மேலும் ஒன்றரை லட்சம் பேரை அரச வேவையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்.

உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, மீன்பாடும் தேன் நாட்டில் கடந்த 30 வருடகாலமாக இருந்த துன்பம் இப்போது இல்லை. நீங்கள் எங்கு சென்றாலும் அபிவிருத்தி வேலைகளைக் காண்பீர்கள்.

என்னைக் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறச் செய்தீர்கள். இந்த தேர்தலிலும் வெற்றிபெறச் செய்வீர்கள். நாம் எப்போதும் சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம். எமது தேசம் இன்னும் முன்னேறவேண்டும். நீங்களும் முன்னேற வேண்டும்.

எனவே பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: