20 Dec 2014

மக்களின் குடியிருப்புக் காணிகளுக்கான காணி அனுமதிப் பத்திரங்களை மிக விரைவில்

SHARE
கல்குடாத் தொகுதியில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் குடியிருப்புக் காணிகளுக்கான காணி அனுமதிப் பத்திரங்களை மிக விரைவில் பெற்றுத்தருவதாக மகநெகும தலைவர் கே.கே.டி.ரணவக்க தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாட்டில் ஏற்பட்ட நிலையான சமாதானத்தை ஏற்படுத்திய அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேரணியும்; மிக நீண்ட காலமாக காணி அனுமதிப் பத்திரம் இன்றி உள்ள காணிகளுக்கு, காணி அனுமதிப்பத்திரம் பெற்றுதருமாறு கோரி, அதற்கான மகஜர் கையளிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (19) மாலை ஓட்டமாவடி நாவலடி பிரதேசத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

இப்பகுதியில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் குடியிருப்புக் காணிகளுக்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டு மிக விரைவில் பெற்றுத் தருவதற்கும் இப்பகுதிகளுக்கான அடிப்படை வசதிகளையும் செய்து தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந் நிகழ்வில் வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை, கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான தமிழ் முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: