(சபேஷ்)
மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டார்கள் என் சந்தேகத்தின் பேரில் மூவரைக் கைதுசெய்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்ர்கள் இருவரிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சித்தாண்டி பிரதேசத்தில் மூன்று இடங்களில் செவ்வாய்கிழமை இரவு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
சித்தாண்டி இராமகிருஸ்ணமிஷன் வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சீருடைகள் உட்பட பாடசாலை உபகரணங்களும் சித்தாண்டிப் பிரதேசத்திலுள்ள கோப் சிற்றியிலிருந்து சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான அரிசி, பால்மா என்பனவும் சைக்களின் உதிரிப்பாகங்கள் திருடப்பட்டிருந்தன.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொண்ட போது மூவர்; சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் நால்வர் தேடப்பட்டுவருவதாகவும் பொலிஸார் கூறினர்.
0 Comments:
Post a Comment