12 Dec 2014

விமானப்படையின் அன்ரனோவ் விமானம் வீழ்ந்து நொறுங்கியது ( வீடியோ இணைப்பு)

SHARE
கொழும்பிற்கு அடுத்துள்ள அத்துருகிரிய ஹோகந்தரவில் விமானமொன்று இன்று வெள்ளிக்கிழமை காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ்விபத்து தொடர்பான தகவலை சிவில் விமான சேவைகள் கட்டுப்பாட்டுத் திணைக்களம் உறுதி செய்துள்ளது.

அன்ரனோவ் 32 ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த விமான விபத்து காரணமாக இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.6.20 மணியளவில் ஹோகந்தர கத்தரீன் பார்க் பகுதியில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விமானத்தில் நால்வர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.தற்போது பொலிஸாரும் மீட்புப் பணியாளர்களும் இணைந்து காயமடைந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
SHARE

Author: verified_user

0 Comments: