1 Dec 2014

ஆளும் கட்சியைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் மாத்திரமே கிழக்கு மாகாண சபைக்கு சமூகமளித்திருந்தனர்.

SHARE

கிழக்கு மாகாணசபை அமர்வு திங்கட்கிழமை (01) காலை ஒத்திவைக்கப்பட்ட நிலையில்,  மீண்டும் முற்பகல் 10.15 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றுவருவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

திங்கட்கிழமை (01) காலை கிழக்கு மாகாணசபை அமர்வு  ஆரம்பமாகியபோது, மாகாணசபையில் ஆளும் தரப்பு உறுப்பினர்களின் பிரசன்னம் குறைவாக இருந்தமையால் சபை சற்றுநேரம் ஒத்திவைக்கப்பட்டது.

ஆளும் கட்சியைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் மாத்திரமே சபைக்கு சமூகமளித்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளியேறியதால், சபை அமர்வு சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டது.

ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு மாகாணசபை  அமர்வு மீண்டும் ஆரம்பமாகியபோது, ஆளும் தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் சமூகமளித்துள்ள நிலையில்,  தற்போது கிழக்கு மாகாணசபை அமர்வு இடம்பெற்றுவருவதாகவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாண சபையில், ஆளும் தரப்பு உறுப்பினர்கள் 22 பேரும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் 15 பேரும் இருக்கின்றமை  குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: