கடந்த சில
வாரங்களாக பெய்த கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட
திருகோணமலை மாவட்ட மக்களுக்கு 45.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரி.திஸ்ஸ ரஞ்சித் டி சில்வா
தெரிவித்தார்.
அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட
மக்களுக்கு தேவையான சகல வசதிகளும் கிரமமான முறையில் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. நேற்று முதல் திருகோணமலை மாவட்டத்தில் சுமூகமான காலநிலை நிலவி
வருகின்றது. இதன் காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது
ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின்கீழ் தேவையான வசதிகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக தரை மார்க்கமான போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ள சில பிரதசங்களில் அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் கடற்படையினரால் படகு சேவை நடைபெறுகின்றது.
அத்துடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரு வார காலத்திற்கு தேவையான உலர் உணவுகளும் வழங்கப்படுகின்றன.(nl)

0 Comments:
Post a Comment