30 Dec 2014

இதுவரை இடம்பெற்ற தேர்தல் வன்முறை முறைப்பாடுகள் பற்றிய விபரம்- (CAFFE)

SHARE
-ஜே.எப்.காமிலா பேகம்-

நீதியானதும்   சுதந்திரமானதுமான  தேர்தலுக்கான  மக்கள்  இயக்கம் (CAFFE)    இன்று   (29) பிற்பகல்   கொழும்பு  ஹொட்டல்  ஜானகியில்  செய்தியாளர்  மாநாடு  ஒன்றை  நடத்தியது. 

  இதன்போது  இதுவரை  இடம்பெற்ற  தேர்தல்  வன்முறைகள்  தொடர்பான  அறிக்கையின்  விபரங்களை,  ஊயுகுகுநு அமைப்பின் நிறைவேற்று  பணிப்பாளர்  கீர்த்தி  தென்னகோன்  விளக்கி  இருந்தார்.

இதன்படி   இன்று  (29)   வரை  மொத்தமாக  629 தேர்தல்  சம்பந்தமான    முறைப்பாடுகள்  கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்  அவற்றில்  62  முறைப்பாடுகள்   தேர்தல்  வன்முறைகளுடன்  தொடர்புபட்ட  முறைப்பாடுகளாக  இனங்காணப்பட்டுள்ளதாகவும்  செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: