பெய்து
வருகின்ற கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திருகோணமலை
மாவட்டத்தில் இன்று வரை (24) 11555 குடும்பங்களைச் சேர்ந்த 36238
அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ
மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் விராஜ் திஸாநாயக்க தெரிவித்தார்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச
செயலகத்தில் 362 குடும்பங்களைச் சேர்ந்த 1488 பேரும் தம்பலகாமம் பிரதேச
செயலகப்பிரிவில் 925 குடும்பங்களைச் சேர்ந்த 3348 பேரும் சேருவில பிரதேச
செயலகப்பிரிவில் 362 குடும்பங்களைச் சேர்ந்த 1180 பேரும் கந்தளாய் பிரதேச
செயலகப்பிரிவில் 389 குடும்பங்களைச் சேர்ந்த 1308 பேரும் மூதூர் பிரதேச
செயலகப்பிரிவில் 2500 குடும்பங்களைச் சேர்ந்த 9250 பேரும் கிண்ணியா பிரதேச
செயலகப்பிரிவில் 3329 குடும்பங்களைச் சேர்ந்த 6621 பேரும் வெருகல் பிரதேச
செயலகப்பிரிவில் 3461 குடும்பங்களைச் சேர்ந்த 12300 பேரும் குச்சவெளி
பிரதேச செயலகப்பிரிவில் 227 குடும்பங்களைச் சேர்ந்த 743 பேரும்
பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அத்துடன் 6 வீடுகள் முற்றாகவும் 183 வீடுகள் பகுதியளவும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுள் 2357 குடும்பங்களைச் சேர்ந்த 8527 பேர் 28 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு தேவையான உதவிகள் மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரி. திஸ்ஸ ரஞ்சித் டி. சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் வழங்கப்பட்டுவருவதாக உதவிப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.(nl)

0 Comments:
Post a Comment