17 Dec 2014

03 மாடுகள் படுகாயம்

SHARE
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வட்டமடு மேய்ச்சல்தரைப் பிரதேசத்திலுள்ள   கால்நடைகள் மீது இனந்தெரியாதோரால் திங்கட்கிழமை (15) இரவு   துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டும் கத்தியால் வெட்டப்பட்டுள்ள சம்பவத்தில், மூன்று மாடுகள்  படுகாயமடைந்துள்ளதாக ஆலையடிவேம்பு கால்நடை பால் பண்ணாளர் விவசாய கூட்டுறவு சங்கத் தலைவர் அ.முருகன் தெரிவித்தார்.

இது தொடர்பில் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட கால்நடையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (16) காலை வழமைபோன்று, மேய்ச்சல்தரைப் பிரதேசத்திலுள்ள மாட்டுப்பட்டிக்குச் சென்றபோதே இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக வட்டமடு  மேய்ச்சல்தரைப்  பிரதேசத்தில் கால்நடையாளர்களுக்கும் விவசாயிகளுக்குமிடையில் மேய்ச்சல்தரை காணி தொடர்பில் முறுகல் நிலை  இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.(tm)
SHARE

Author: verified_user

0 Comments: