17 Nov 2014

உயர்தொழிநுட்ப கல்லூரிகள் மாணவர்களது கல்வி வளர்ச்சியை அதிகரிக்க முன்வர வேண்டும்

SHARE
வடமாகாணத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்வியல் கல்லூரிகள், உயர் தொழிநுட்ப கல்லூரிகள், என்பன கல்வி வளர்ச்சியின் ஆரம்ப படியான பாடசாலை மாணவர்களுக்காக சேவை செய்து கொண்டிருக்கின்றது.

என மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் தெரிவித்துள்ளார்.

மட்.மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும்  கல்வி பொதுதர சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு அவர்களின் ஆங்கிலப் பாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு உயர் தொழிநுட்ப கல்லூரியினால் கல்விக் கருத்தரங்கு ஒன்று மட்.மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (16)  இடம்பெற்றது.

இக்கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்… எமது கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்வியல் கல்லூரிகள், உயர் தொழிநுட்ப கல்லூரிகள், போன்ற திணைக்களங்கள் சேவை செய்ய முன்வருவது குறைவாகவுள்ளது. அவ்வாறு சேவை செய்ய முன்வருவதன் மூலம் ஆரம்ப படியான மாணவர்களின் பாடசாலை கவ்வியின் வளர்ச்சியை அதிகரிக்க முடியும். அதன் விளைவில் அனைத்து உயர்கல்வியின் வளர்ச்சியும் அதிகரிக்கும் இதற்காகவேண்டி  உயர் தொழிநுட்பக் கல்லூரிகள் முன்வரவேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உயர் தொழிநுட்ப கல்லூரியின் பணிப்பாளர் எஸ்.ஜெயபாலன், ஆங்கிலப்பாட விரிவுரையாளர்களும் கலந்து கொணடு மாணவர்களுக்கான விரிவுரைகளை வழங்கினர்.

வித்தியாலயத்தின் அதிபர் பொ.நேசதுரை
தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் உட்பட்ட பல கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


SHARE

Author: verified_user

0 Comments: