களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட எருவில் கிராமத்தில் சமூக மட்ட விபத்துக்களை குறைத்தல் தொடர்பான விழிப்புணர்வூட்டல் நிகழ்வு சர்வோதய அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.மதனகுமார் தலைமையில் எருவில் பலதேவைக் கட்டடத்தில் நேற்று வெள்ளிக் கிழமை (07) நடைபெற்றது.
யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் சர்வோதய அமைப்பு இதனை மே;றகொண்டது.
இவ்விழிப்புணர்வூட்டல் நிகழ்வில் சிறுவர் நன்னடத்தை மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் வி.குகதாசன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் கே.எம்.புவிதரன், சர்வோதய அமைப்பின் வெளிக்கள உத்தியோகத்தர், எம்.பத்மாவதி மற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சமூக மட்ட விபத்துக்கள், வீதிவிபத்து, குடும்பத்தின் மத்தியில் ஏற்படும் சிறுவர் விபத்து போன்ற விடயங்கள் தொடர்பாக விழிப்புணர்வு வழங்கப் பட்மை குறிப்பிடத் தக்ததாகும்.
0 Comments:
Post a Comment