களுவாஞ்சிக்குடி பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட பெரிய கல்லாறு பிள்ளையார் கோவிலுக்கு முன்பாகவுள்ள
கடையுடன் சிறிய கப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. திங்கட்கிழமை (24)
காலை இடம்பெற்ற விபத்தில் மேற்படி வாகனமும் கடையும் சேதமாகியுள்ளதாக
களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் தெரித்தனர்.
மஞ்சள் கடவைக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் நின்றமையால், பிரதான வீதியால்
பயணித்துக்கொண்டிருந்த மேற்படி வாகனத்தை நிறுத்த முற்பட்டபோது வேகக்
கட்டுப்பாட்டை இழந்து கடையுடன் மோதியது. இதன்போது, கடையில்
இருந்தவர்களும் வாகன சாரதியும் தெய்வாதினமாக தப்பியுள்ளனர்.
0 Comments:
Post a Comment