25 Nov 2014

த.தே.கூட்டமைப்புடன் உடன்படிக்கைகளை செய்து கொண்டு முஸ்லிம் சமூகத்தினையும் எதிர்ப்பு அரசியல் செய்யத் தூண்டுபவர்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது

SHARE
மக்களால் நிராகரிக்கப்பட்ட சக்திகள் த.தே.கூட்டமைப்புடன் உடன்படிக்கைகளை செய்து கொண்டு முஸ்லிம் சமூகத்தினையும் எதிர்ப்பு அரசியல் செய்யத் தூண்டுபவர்களாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக என பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.                                                                                               மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்திற்கு அமைவாக ´திவிநெகும´ திட்டத்தின் அடிப்படையில் மக்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு காத்தான்குடியில் இடம்பெற்றது. 
காத்தான்குடி பிரதேச செயலாளர் முசமிலின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தங்களது சொந்த இலாபத்திற்காக முஸ்லிம்களை எதிர்ப்பு அரசியல் செய்ய முயற்சிக்கிறார்கள். இந்த விடயத்தில் எம்மவர்கள் மிகவும் அவதானமாகவும், உறுதியாகவும் இருந்து செயற்பட வேண்டும். 
எமது தலைவலர்கள் எப்போதும் இந்த நாட்டில் இருக்கும் பெரும்பான்மை சமூகத்துடன் சேர்ந்துதான் வாழ வேண்டுமே தவிர, எப்போதும் அவர்களுக்கு எதிராக எதிர்ப்பு அரசியலை செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கின்றார்கள். 
இந்த நாட்டிலே அண்மையில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றினை சந்திக்க இருக்கின்றோம். அந்தவகையில் தன்னுடைய அதிகாரம் 6 வருடங்கள் இருந்தபோதும் நான்கு வருடங்கள் பூர்த்தியடைந்த தினத்தில் இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கையில் அவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். 
இந்த அழைப்பின் மூலம் சர்வதேச உலகத்திற்கும் ஏகாதிபத்திய நாடான அமேரிக்கா உட்பட அனைத்து சர்வதச நாடுகளுக்கும் எமது நாட்டு மக்கள் எங்களுடன்தான் இருக்கின்றார்கள் என்பதனை எடுத்துக்காட்டி, அவர்களுக்கு சாட்டை அடி கொடுப்பதற்காகத்தான் இந்த தேர்தலை ஜனாதிபதி அறிவித்திருக்கின்றார். 
எதிர்வரும் காலத்தில் இந்த நாட்டிலே எவரும் வறுமையோடு வழக்கூடாது. அனைவரும் அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி அடைய வேண்டும் என்பதுதான் ஜனாதிபதியின் குறிக்கோளாக இருந்து வருகின்றது. 
அதற்காக பல மில்லியன் ரூபாய்களை இந்த மாவட்டத்திற்கு பொருளாதார அமைச்சு மூலம் ஒதுக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. 
30 வருடங்களாக இந்த நாட்டிலே நடைபெற்ற கொடூர யுத்தத்தினால் இந்த நாட்டிலே முஸ்லிங்கள் பட்ட இன்னல்களை ஒரு கனம் அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். 
அன்று எம்மவர்கள் நிம்மதி இழந்து வாழ்ந்தார்கள், எங்கும் வியாபாரத்திற்கு போகமுடியாமல் தவித்தார்கள். இப்படித்தான் எமது சமூகம் பல இன்னல்களை எதிர்நோக்கியிருந்தது. 
யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு 5 ஆண்டுகள் கடந்த இந்த நேரத்தில் யுத்தத்திற்காக பயன்படுத்தப்பட்ட கோடான கோடி ரூபாய்களைக்கொண்டு இந்த நாட்டு மக்களின் அபிவிருத்தியினை முன்கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக எமது பொருளாதார அமைச்சு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. 
இந்த நாட்டிலே ஒரு குடிசைகூட எதிர்காலத்தில் இருக்கக்கூடாது. மாறாக 2020 ஆம் ஆண்டு வரும்போது அனைவரும் கல்வீடுகளிலே இருக்க வேண்டும். 
இதற்காக எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து எங்களால் அரச உத்தியோகத்தில் நியமிக்கபப்ட்டவர்களை கொண்டு ஒவ்வொரு வீடு வீடாகச்சென்று அந்த மக்களின் நிலையை அறிந்து அவர்களின் வளமான வாழ்விற்கு வழியேற்படுத்தி கொடுக்க இருக்கின்றோம். 
இவ்வாறாக எங்களது பொருளாதர அமைச்சு ஊடாக இன்னும் பல திட்டங்களை எதிர்வரும் காலத்தில் செய்ய இருக்கின்றோம். 
இந்த நாட்டிலே சில பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் எங்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனை நாம் முறியடிக்க வேண்டுமானால் எமது சமூகம் பெரும்பான்மை சமூகத்துடன் சேர்ந்திருந்து அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதனை ஒவ்வொரும் உணர்ந்து கொள்ள வேண்டும். 
எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொள்வதுடன் எமது எதிர்கால பாதுகாப்பினையும் கருத்தில் கொண்டு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்கள் தெளிவாக முடிவெடுக்கவேண்டும் என்றார். 
SHARE

Author: verified_user

0 Comments: