6 Nov 2014

மட்டக்களப்பு மாவட்டத்தில 45000 ஏக்கர் மரமுந்திரிகை செய்கை பண்ணக் கூடிய நிலம் அமைந்துள்ளது - பிராந்திய முகாமையாளர் பா.சசிகரன்

SHARE







மட்டக்களப்பு மாவட்டத்தில 45000 ஏக்கர் மரமுந்திரிகை செய்கை பண்ணக் கூடிய நிலம் அமைந்துள்ளது. ஆனால் இதுவலையில் இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் 9000 ஆயிரம் ஏக்கர் நிலத்தில்தான் மரமுந்திரிகை செய்கை பண்ணப்பட்டுள்ளன. மேலதிக 36000 ஏக்கர் நிலங்கள் மரமுந்திரிகை செய்கை பண்ணப்படாமல் இருக்கின்றன.

என மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின்  மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பா.சசிகரன் கூறினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள் பற்றி இன்று ஞாயிற்றுக் கிழமை (02) தெடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்குகையில்….

மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் கீழ் மூன்று வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப் பட்டுள்ளர்கள். அவர்கள் மூலமாக எமது மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப் படுகின்ற வேலைத் திடங்களை பொது மக்கள் பெற்றுக்கொள்ள முடியும். இவை மட்டக்களப்பு  மாவட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உறுதுணையாக அமையும்.

எனவே மக்களின் ஒத்துளைப்பினூடாகத்தான், எமது செயற்பாட்டில் வெற்றியினை எட்ட முடியும். இதற்கு எமது கூட்டுத்தாபத்தினால் மரமுந்திரிகை கன்றுகள், தேவையான ஆலோசனைகள், பசளைகள், மற்றும் கொடுப்பனவுகளும் மானியமாக வழங்கப்படும். இவற்றினைப் பெற்று உரிய பலனை இம்மாவட்ட மக்கள் நன்மையடைய முன்வர வேண்டும்.

எனவே மக்கள்  அரை ஏக்கர் தொடக்கம் 10 ஏக்கர் நிலம் வரையுள்ள நிலைத்தில் மரமுந்திரிகை செய்கை பண்ணுவதற்கு நாம் உதவி செய்வேம். எம்மிடம், மக்கள் எவ்வேளையிலும் நாடுகின்றபோது வேண்டிய உதவிகளையும், ஆலோசனைகளையும், மேற்கொள்வதற்கு எமது மரமுத்திரிகை கூட்டுத்தின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயம் காத்தருக்கின்றது என அவர் மேலும் கூறினார்.
SHARE

Author: verified_user

0 Comments: