வெளிநாட்டு டொலர்களின் மூலம் இந்நாட்டு மக்களின் வாக்குகளை சூறையாட
நினைப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட காத்துக்
கொண்டிருக்கின்றார்கள்;' என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன
அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் செவ்வாய்க்கிழமை(25) நடைபெற்றது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பது மற்றும் பிரசார நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் தேர்;தல் குழு அமைத்து உரையாற்றுகையில் கிழக்கு மாகாண அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'கடந்த 30 வருடகாலமாக பயங்கரவாதிகளின் ஆதிக்கதில் மிகவும் ஆதாளபாதாளத்தில் கிடந்த இந்த நாட்டை மீட்டெடுத்த எமது ஜனாதிபதி நாட்டின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய தலைவராவார்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாடு, துரித அபிவிருத்தி அடைந்து வருவதை விரும்பாததன் காரணமாகவே மேற்கத்தேய நாடுகள் டொலர்களை வழங்கி இந்த நாட்டை மீண்டும் இருண்டதொரு சூழலுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கையை ஐக்கிய தேசிய கட்சியின் மூலம் முன்னெடுத்து வருகின்றது.
இந்த நாட்டில் பயங்கரவாதமே முதன்மை பிரச்சிiனாக இருந்துவந்தது. மக்கள் நிம்தியாக பயணம் செய்ய முடியாமலும், தமது வயல்களுக்கும் பாடசாலைகளுக்கும், தொழில்களுக்கும் செல்ல முடியாத நிலையிலும் இருந்து வந்தார்கள்;. இ,வைகள் அனைத்தையும் மறந்து இன்று நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் தூங்கி வருகின்றோம்.
இந்த நாட்டில் பிரச்சினைகள் இ,ல்லாமலில்லை. பல்லின சமூகங்கள் வாழ்ந்து வரும் ஒரு நாட்டில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தோன்றத்தான் செய்யும். சிறுபான்மை இனங்களுக்கான பிரச்சினைகள், மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள், சமயம், கலாசாரம் தொடர்பான பிரச்சினைகள் இருந்து வருவதை நாம் மறுப்பதற்கில்லை.
அவைகள் அனைத்தும் எமது நாட்டிற்குள் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்.
குறிப்பாக முஸ்லிம் சமூகம் மிகவும் நிதானமாகவும், புத்தி சாதுர்யமாகவும் எதிர்வரும் தேர்தலைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
வடக்கு, கிழக்குக்கு வெளியே மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம் சகோதரர்கள் பெரும்பான்மை சமூகத்துடன் வாழந்து வருகின்றனர். அவர்களது பாதுகாப்பு, உரிமைகள், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டியது இன்றய காலத்தின் தேவையாகும்.
எதிர்வருகின்ற ஜனாபதி தேர்தலில் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வருவது உறுதி. இந்த வெற்றியின் பங்காளிகளாக முஸ்லிம்கள் மாறவேண்டும்.
முஸ்லிம்கள் ஜனாதிபதியின் வெற்றிக்கு உழைத்தவர்கள் என்ற நற்பெயரை எடுத்துக் கொள்வதன் மூலம் உரிமையுடன் எமது பிரச்சினைகளை அனுகுவதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்த வேண்டும்
ஐக்கிய தேசிய கட்சியின் சாரதியாக ரணில் இருக்கும் வரை அந்த வாகனத்தில் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஏறி பயணம் செய்யாது என்று மர்ஹூம் அஷ்ரப் அப்போதே கூறிவிட்டார். இதனை அன்று எமது தலைவர் அஷ்ரப் தூர நோக்கான சிந்தனையுடன் கூறியிருந்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின் மூலம் முஸ்லிம் சமூகம் எந்தவிதமான நன்மைகளையும் பெற்றுக் கொள்ளவில்லை. அதனால்தான் மர்ஹூம் அஷ்ரப் அன்று அவ்வாறு கூறியிருந்தார்.
சுமார் இரண்டு வருடங்களாக சர்வதேசம் இந்;த நாட்டின் ஆட்சியை மாற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கவின் மூலம் சூழ்ச்சிமமாக திட்டமிட்டு வந்துள்ள விவகாரம் இந்த நாட்டுமக்களையும் அரசியல் தலைவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேசம் பலகோடி பெறுமதியான டொலர்களை வழங்கி ஏன்? இவ்வாறு கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றதென மக்கள் இன்று நன்கு விளங்கியுள்ளனர்.
நாட்டையும், நாட்டு மக்களையும் எவ்வாறாயினும் கூறுபோட்டு ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற ஐக்கிய தேசிய கட்சியின் வலையில் அறியாமலே மைத்திரிபால சிறிசேன சிக்கியுள்ளார்.
அவர் மீண்டும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளும் நாட்கள் மிக தூரமில்லை' என அவர் மேலும் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment