29 Nov 2014

சவூதியில் கடந்த செப்டெம்பர் மாதம் 11ம் திகதி மாரடைப்பின் காரணமாக இறந்தநாவிதன்வெளியைச்சேர்ந்த குடும்பஸ்தரின்சடலம் வந்துசேர்ந்தது

SHARE
சவூதியில் கடந்த செப்டெம்பர் மாதம் 11ம் திகதி மாரடைப்பின் காரணமாக இறந்த இலங்கையின்அம்பாறை மாவட்டம்  நாவிதன்வெளியைச்சேர்ந்த குடும்பஸ்தரின்சடலம் நேற்று முன்தினம் இலங்கை வந்துசேர்ந்தது. சடலம் உறவினரால் பொறுப்பேற்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை வீட்டுக்குக்கொண்டுவரப்பட்டு அஞ்சலியின் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
நாவிதன்வெளி ஏழாம் கிராமத்தைச்சேர்ந்த கோவிந்தபிள்ளை ரத்னசிங்கம்(வயது 43) என்ற குடும்பஸ்தரே இவ்விதம் மரணமானவர். இவர் 3 பிள்ளைகளின் தந்தையாராவார். 
 
இருவருடங்களுக்கு முன்னர் குடும்பகஸ்டம் கருதி சவூதி சென்றிருந்தார். சவூதியில் கடந்த செப்டெம்பர் மாதம் 11ம் திகதி மாரடைப்பின் காரணமாக இறந்த கோவிந்தபிள்ளை ரத்னசிங்கத்தின்சடலத்தையும் ஆவணங்களையும் பெறுவதற்காக அவரது  மைத்துனரான கோ.ரத்னசிங்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்கின்ற தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக செயற்பட்டு வருகின்ற மனித அபிவிருத்தி தாபனத்தின்  கிழக்கு பிராந்திய காரைதீவிலுள்ள  காரியாலயத்திற்கு சென்று முறையிட்டார்.
 
கிழக்கு மாகாண இணைப்பாளர் பொன்.ஸ்ரீகாந் தலைமையிலான குழுவினர்  இரவுபகலாக மேற்கொண்ட முயற்சியின்காரணமாக சடலமும் அதற்கான ஆவண பிரதிகளையும் உறவினர் பெற்றுக்கொண்டனர். இவர்கள்  இதுபோன்று ஏலவே சவூதியில் மரணித்த பலரது சடலத்தையும் அதற்கான நஸ்ஈட்டையும் பெற்றுக்கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இச்சடலமானது 27.11.2014ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கோவிந்தபிள்ளை ரத்னசிங்கம் என்பவரின் மைத்துனரான எஸ்.சுதாகரன் கையில் பி.ப 3.00 மணியளவில் விமான நிலைய பொதிகள் பிரிவு உத்தியோகஸ்தர்களால் வழங்கப்பட்டுள்ளது.
 
நேற்று நாவிதன்வெளி ஏழாம் கிராமத்திலுள்ள மரண வீட்டிற்கு மனித அபிவிருத்திதாபன இணைபபாளர் ஸ்ரீகாந் உதவிஇணைப்பாளர்பங்களசை;செலு றியாழ் ஆகியோர் சென்று தமது அனுதாபங்கை செலுத்தியுள்ளனர்.
 
அங்கு அவரது  மைத்துனரான கோ.ரத்னசிங்கம் என்பவரின் சடலம் மனித அபிவிருத்தி தாபனத்தின்  வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழிலாளர்களின் நலன்நோக்கு பிரிவினரின் பாரிய முயற்சியின் காரணமாக கிடைக்கப்பெற்றது என்று நன்றியுடன்  எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.
அவர்மேலும் தெரிவிககையில் எமது மைத்துனரின் மரணச்செய்தியைக் கேட்டவுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்கின்ற தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக செயற்பட்டு வருகின்ற மனித அபிவிருத்தி தாபனத்தின்  கிழக்கு பிராந்திய காரியாலயத்திற்கு (இல:-02,பிள்ளையார் கோயில் வீதி, காரைதீவு – 05 ) சென்றோம்.
 
அன்று தொடக்கம் எமது மைத்துனரின் சடலம் எமக்கு கிடைக்கும் வரை மனித அபிவிருத்தி தாபனம் எமக்கு பக்கபலனாக இருந்தது. தாபனத்தின் உதவி இணைப்பாளர் எம்.ஐ.ரியாழ் அவர்களின் வழிகாட்டலில் நாம் செயற்பட்டோம். இவை அனைத்திற்கும் முதற்கண் மனித அபிவிருத்தி தாபனத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். என்றார்.
 
கோ.ரத்னசிங்கம் என்பவர் பல வருடங்களாக சவூதி நாட்டில் தொழிலுக்கு சென்று வந்த அனுபவமிக்கவர். இவரது மனைவி 03 குழந்தைகளையும் பராமரித்து வந்தார். ஒரு ஆண் பிள்ளையையும், 2 பெண் பிள்ளைகளையும் முறையாக கற்பித்து வந்துள்ளார். மூத்தபெண்பிள்ளை இளவயதில் திருமணம் முடித்துள்ளார். மகன் பாடசாலையைவிட்டு இடைவிலகியுள்ளார். இந்நிலையில் பொருளாதார தேவை நிமித்தமே அவர் வெளிநாட்டு புலம்பெயர் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
 
கோ.ரத்னசிங்கம் என்பவரின் மரணத்தின் பின்னர் அவரது குடும்பத்தின் பொருளாதார நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இதன் காரணமாக கல்வி கற்கும் பிள்ளைகளின் கல்வி இடைநடுவே நின்றுவிடும் என்னும் அச்சம் இறந்தவரின் மனைவியான கோமதி (வயது 40) என்பவருக்கு காணப்படுகின்றது. நிர்க்கதியாகியுள்ள அவர்களது குடும்ப வாழ்வியலுக்கு உதவுவார்களா? என தாபனத்தினர் கேட்டுள்ளனர்.
SHARE

Author: verified_user

0 Comments: