13 Mar 2014

பிரஜா உரிமைதொடர்பாககலந்துரையாடல் நிகழ்வு

SHARE



நோர்வே தூதுவராலயத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு சர்வோதயத்தின் அமைப்பின்னால் களுவாஞ்சிக்குடி தேசோதயசபைக் குழுவினர்களுக்கு பிரஜா உரிமைகள் தொடப்பாக விளக்கமளிக்கம் செயலமர்வு ஒன்று நேற்று (07) கலந்துரையாடல் இடம்பெற்றது.
மட்டக்களப்பு சர்வோதயத்தின் அமைப்பின் சமூக ஒருங்கிணைப்பாளர் கே.மதனகுமார் அவர்களின் தலைமையில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் ஒன்றிணைந்து தீர்வினைக்காணல் எனும் கருத்திட்டத்தின் கீழ் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் களுவாஞ்சிக்குடி பிரதேசசெயலாளர் எம். கோபாலரெட்ணம் , மட்டக்களப்பு மாவட்டத்தின் தேசோதய சபையின் தலைவர் க.வேதாரணியம் மற்றும் களுவாஞ்சிகுடி தேசோதயசபையின் உறுப்பினர்கள் மற்றும் பிரதேசத்தின் மாதர் சங்கம், கிராஅபிவிருத்திசங்கம், சர்வோதயத்தின் சிரமதான குழு உறுப்பினர்கள், மண்முனைதென் எருவில் பற்றுபிரதேசசபையின் உத்தியோகத்தர் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சமாதானம், அபிவிருத்தி, நல்லாட்சி என்பவற்றில் பொதுமக்களுக்கான பிரஜா உரிமைகள் தொடர்பாகவும்  தகவல்களை பொதுமக்கள் மத்தியில் எவ்வாறு பரிமாற்றுதல் எனவும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும். 

SHARE

Author: verified_user

0 Comments: