(சக்தி)
களுவாஞ்சிகுடி பிரதேச சிவில் பாதுகாப்புக் கூட்டமானது களுவாஞ்சிகுடி பொலீஸ் நிலைய
பதில் பொறுப்பதிகாரி என். ரீ. ஆபுபக்கர் தலைமையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில்
கடந்த அன்று 26 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட சிவில் பாதுபாப்புக்
குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கெண்டிருந்தனர்.
இதன் போது பிரதேச பாதுகாப்பு தொடர்பாக கலந்துரையாடப் பட்டதுடன், கடந்த காலங்களில்
பிரதேசத்தில் இடம்பெற்ற கடத்தல், கொள்ளை சம்பவங்கள்,போன்ற சம்பவங்கள் தொடர்பிலும் ஆரயப்பட்டன.
எதிர்வரும் காலங்களில் இது போன்ற அசம்பாவிதங்கள் இடம்பெறாமல் இருக்க சிவில் பாதுகாப்பு குழு மக்களை அறிவுறுத்த வேண்டும், எனவும் சிவில் பாதுகாப்புக்
குழுக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இதன்போது களுவாஞ்சிகுடி பொலீஸ் நிலைய
பொறுப்பதிகாரி என். ரீ. ஆபுபக்கர் அவர்களினால் சிவில் பாதுகாப்பு அங்கத்தவர்களுக்கு
அறிவுறுத்தல் வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்
0 Comments:
Post a Comment