1 Mar 2014

பெரியகல்லாறு பகுதியில் அடகு நிலையம் கொள்ளையிட முயற்சி

SHARE

 (சக்தி)


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கடந்த அன்று 26 அன்று அடகு நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு கொள்ளையிட முயற்சிக்கப் பட்டுள்ளதாக. களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியின் பெரியகல்லாறு பொதுச்சந்தையிலுள்ள நகை அடகு பிடிக்கும் வர்த்தக நிலையத்திலேயே இக்கொள்ளை முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது.
வர்த்தக நிலையத்தில் முகப்புப் பகுதியினை உடைத்துக் கொண்டு உள் நுழைந்துள்ள இனந்தெரியாத நபர்கள், இந்த வர்த்த நிலையத்தில் கொள்ளையிடுவதற்கு எதுவும் அற்ற நிலையில் திரும்பிச் சென்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை இச்சம்பவம் கொள்ளைக்கு முயற்சிக்கப்பட்டதா அல்லது ஏதாவது முரண்பாடுகளினால் மேற்கொள்ளப்பட்டதா என்ற வித்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர் தெரிவித்தார்.

இது தொடர்பில் தீவிர விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் தொடர்பில் சில தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: