14 Mar 2014

பிரதேச அபிவிருத்தி வங்கியின் களுவாஞ்சிகுடி கிளையானது கடந்த ஒரு வருடத்தினுள் 112 மில்லியன் ரூபா வைப்பினை பெற்றுள்ளது

SHARE

(சக்தி)
பிரதேச அபிவிருத்தி வங்கியின் களுவாஞ்சிகுடி கிளையானது கடந்த ஒரு வருடத்தினுள் 112 மில்லியன் ரூபா வைப்பினை பெற்றுள்ள அதே வேளை 121மில்லியன் ரூபாவினை கடனாகவும் வழங்கியுள்ளது. வழங்கப்பட்ட இக்கடன் தொகையில் 92 மில்லியன் ரூபாய் மீழ் சுழற்சிக் கடனும், 29 மில்லியன் ரூபாய் வாழ்வாதாரத் தொழில்களுக்கும் வழங்கட்டதாக மேற்படி வங்கிக் கிளை அறிவித்துள்ளது.

பிரதேச அபிவிருத்தி வங்கியின்  களுவாஞ்சிகுடி கிளை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட பூர்தியினை முன்னிட்டு நேற்று (13)  வியாழக்கிழமை கேக் வெட்டி ஒரு வருட பூர்தியினைக் கொண்டாடினர். 

இதன்போதே இத்தகல் வெளியிடப்பட்டன

பிரதேச அபிவிருத்தி வங்கியின் களுவாஞ்சிகுடி கிளை முகாமையாளர் ஜே.கே.பிரான்சிஸ், அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிராந்திய பொது முகாமையாளர் டி.ரி.எம்.எஸ்.குமார மாவட்ட முகாமையாளர் கே.சந்தானம், மண்முனை தென் எருவில் பற்று பிரிவு பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், மற்றும் மட்டக்களப்பு மவட்டத்திலுள்ள பிரதேச அபிவிருத்தி வங்கிகளின் முகாமையாளர்கள் வாடிக்கையாளர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இதனை விட கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்கையிலுள்ள பிரதேச அபிவிருத்தி வங்கிகளிடையே இடம்பெற்ற புதுவருடக் கொடுக்கல் வாங்கல்களில் களுவாஞ்சிகுடி கிளை 4 கோடியினைப் வைப்பாக பெற்று முதலிடத்திலுள்ளதாகவும், இவ் வங்கிக் கிளையில் சேமிப்பு, கடன் வசதி, அடகுச் சேவைகள், ஏனைய வங்கிகளிலிருந்து பணப் பரிமாற்றல் சேவை, நிலையான வைப்பு, போன்றன அமையப் பெற்றுள்ளதாகவும் பிரதேச அபிவிருத்தி வங்கியின் களுவாஞ்சிகுடி கிளை தெரிவிக்கின்றது.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் களுவாஞ்சிகுடி கிளை இலங்கையில் 265வது  கிளையாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.












SHARE

Author: verified_user

0 Comments: