10 Feb 2014

சித்தாண்டியில் வாழ்வின் எழுச்சி வேலைத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

SHARE
 (சக்தி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டியில் வாழ்வின் எழுச்சி பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் 2104 ஆம் அண்டுக்கான வேலைத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உருத்திரன்-உதயசிறிதர் அவர்களின் தலைமையில் சித்தாண்டி மாகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும் ஜனாதிபதியின் அலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், கிராம சேவை உத்தியேகஸதர்கள், சமூர்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் உத்தியோகஸ்தர்கள், கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கல்வியியலாளர்கள் , பொதுமக்கள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கலந்துரையாடலின்போது 2014 ஆம் அண்டில் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் இணைத்துக் கொள்ளப் பட்டுள்ள கிராமங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ஒரு கிராமத்திற்கு 10 பயனாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் வாழ்வாதார அபிவிருத்தி, மற்றும் கிராம மட்டத்தில் பொது அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பான கலந்துரையாடல்களும் இதன்போது இடம்பெற்றன.

இவ்வபிவிருத்திக் கலந்தரையாடலில் ஏறாவூர் பற்று பிரதேசத்திலுள்ள சித்தாண்டி, 1ஆம், 2ஆம், 3ஆம், 4ஆம், பிரிவுகளிலும், மாவடிவேம்பு கிராமத்தின் 1ஆம், 2 ஆம், பிரிவு கிராமங்களிலும், இவ்வருடம் திவிநெகும வேலைத் திட்டத்தின் கீழ் மேற் கொள்ளவுள்ள அபிவிருத்தி தொடர்பாகவே இக்கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும். 





SHARE

Author: verified_user

0 Comments: