27 Feb 2014

புனிதமிக்கல் கல்லூரிமாணவர்களின் துவிச்சக்கரவண்டிபவனி

SHARE
(வராதன்)
சாரணிய இயக்கத்தின் ஸ்தாபகர் ரொபட் பிவின்சன் ஸ்மித் பேடன் பவல் அவர்களின் 157 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் சாரணிய இயக்க தலைவர் ஜ.கிறிஸ்டி அவர்களின் தலைமையில் துவிச்சக்கரவண்டி பவனி கடந்த 22 அன்று இடம்பெற்றது. இதில் பாடசாலையின் சாரணிய இயக்கத்தின் மாணவர்கள் சுமார் 50 பேர்கள் கலந்து கொண்டனர்.

இப்பவனி புனிதமிக்கல் கல்லூhயில் ஆரம்பமாகி கல்லடி பாலமூடாக வந்தடைந்து மீண்டும் திருமலைவீதி வழியாகச் சென்று மட்டக்களப்பு காந்திசதுக்கத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துடன் பவனிநிறைவடைந்தது.

ரொபட் பிவின்சன் ஸ்மித் பேடன் பவல் இங்கர்லாந்து நாட்டில் 1857.02.22 ஆம் ஆண்டு பிறந்து 1907 ஆம் ஆண்டு அவர் மூலமாக சாரணிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஆவர் 1910.01.08 ஆம் ஆண்டுவரை அவர் நாட்டிற்காகவும் சாரணிய இயக்கத்திற்காகவும் ஆற்றிய சமூகக் கடமைகள் தொடர்பாக கல்லூரியின் சாரணிய இயக்க தலைவர் ஜ.கிறிஸ்டிஅவர்களின் மூலமாக விளக்கமளிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.




SHARE

Author: verified_user

0 Comments: