27 Feb 2014

பாடசாலை மாணவர்களுக்கான கற்றல்உதவி

SHARE

(தர்ஷன்)  

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களைக் கொண்ட மதுரங்கேணிக்குளம் கிராமத்திலுள்ள மதுரங்கேணிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் நேற்று (25) வழங்கி வைக்கப்பட்டது.

இப்பாடசாலைக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக் இங்கு கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அப்பியாசக் கொப்பிகள் உட்பட்ட கல்வி உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது. 
இப்பாடசாலையில் 177 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இங்கு ஆண்டு 11 வரை மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். ஆண்டு ஒன்றில் 11 மாணவர்களும், ஆண்டு இரண்டில் 14 மாணவர்களும், ஆண்டு மூன்றில் 12 மாணவர்களும், ஆண்டு நான்கில் 21 மாணவர்களும், ஆண்டு ஐந்தில் 12 மாணவர்களும், ஆண்டு ஆறில் 20 மாணவர்களும், ஆண்டு ஏழில் 16 மாணவர்களும், ஆண்டு எட்டில் 20 மாணவர்களும், ஆண்டு ஒன்பதில்; 22 மாணவர்களும், ஆண்டு பத்தில் 13 மாணவர்களும், ஆண்டு பதினொன்டில் 16 மாணவர்களும் உள்ளனர்.

ஆனால் ஆண்டு 11 வரை உள்ள இப்பாடசாலைக்கு குறைந்தது 11 ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவ்வேளை இப்பாடசாலை 07 ஆசிரியர்களுடன் விளங்குகின்றது. பெண் ஆசிரியை எவருமில்லை. ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்ட நிலை காணப்படுகின்றது.
இப்பாடசாலை மாணவர்கள் குஞ்சங்குளம், கிருமிச்சையோடை உட்பட்ட தூர இடங்களில் இருந்து வருவதால் போக்குவரத்து பிரச்சனையை எதிர்நோக்குகின்றனர். துவிச்சக்கரவண்டி தங்களுக்கு இருந்தால் உரிய நேரத்துக்கு பாடசாலைக்கு செல்ல முடியும் என தெரிவிப்பதுடன், இதன் காரணமாக தொடர்ச்சியாக பாடசாலைக்கு செல்வதில் இருந்து விலகிக் கொள்கின்றனர். இங்கு கணிதம், விஞ்ஞானம், வரலாறு என்பவற்றுக்;கு ஆசிரியர் இல்லாமை மாணவர் கல்வியை மேலும் பாதித்துக் கொண்டிருக்கின்றது. 

இவ்வேளை இப்பாடசாலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் விஜயம் செய்து இப்பாடசாலை குறை கேட்டறிந்ததுடன், அப்பியாசக் கொப்பிகள் உட்பட்ட கல்வி உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.

அப்பியாசக் கொப்பிகள் உட்பட பொருட்களுக்கு தாங்கள் மிகவும் கஷ்ரப்பட்டுக் கொண்டிருப்பதாக கூறிய மாணவர்கள் இவ் உதவியை புரிந்த லங்காஸ்ரீ இணையத்தளத்திற்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
சில மாணவர்கள் பாடசாலைக்கு அப்பியாசக் கொப்பிகள் இன்மையால் பாடசாலைக்கு வருவதில்லை எனவும் அறிய முடிந்துள்ளது. இவ் அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் உறுப்பினர்களான கி.சேயோன், ச.ஜெயலவன், த.சந்திரகுமார் மற்றும் பாடசாலை அதிபர் எஸ்.மங்களரூபன், ஆசிரியர்கள் உட்பட்டோர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களைக் கொண்ட பிரதேசத்தில் மிகவும் வறிய மக்கள் வாழும் கிராமமான விளங்கும் கிராமம் மதுரங்கேணிக்குளம் ஆகும்.

இக்கிராமத்தின் மக்கள் கூடுதலாக சிறு விவசாயம், கால் நடை வளர்ப்பு, கூலிக்கு வேலைக்கு செல்லல், காடுகளில் மிருகங்களை வேட்டையாடல், காடுகளுக்கு சென்று தேன் எடுத்தல் உட்பட்ட தொழில்களை புரிகின்றனர்.
இதில் மதுரங்கேணிக்குளம், குஞ்சங்குளம் ஆகிய பகுதிகள் உண்டு. இங்கு வாழும் பிள்ளைகள் அன்றாட உணவுக்கு கஷ்ரமான நிலையிலேயே வாழ்கின்றனர். சிலர் ஒரு நாளைக் ஒருவேளை உண்டு கூட கஷ்ரப்படுகின்றனர்.

இக்கிராமம் வாகரைப் பிரதேசத்தின் கிருமிச்சையோடை சந்தியில் இருந்து 10 கிலோமீற்றர் மேற்காக சென்றால் காடுகள் மக்களை சூழப்பட்ட பகுதியில் உள்ளது. இங்கு கிட்டத்தட்ட 152 குடும்பங்கள் வாழ்கின்றது.









SHARE

Author: verified_user

0 Comments: